கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை பிரிவில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிறவிக்காது கேளாமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காக்ளியர் இம்ப்ளான்ட் என்னும் காது வால் நரம்பு அறுவை சிகிட்சை சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. 12 முதல் 15 இலட்சம் ரூபாய் வரை செலவாகும் இச்சிகிச்சை இலவசமாக இத்திட்டத்தின் கீழ் செய்யப்பட்டு, இக்குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது.
இன்றியமையாத முக்கிய உணர்ச்சியான கேட்கும் திறனை பிறவியிலேயே இழந்த குழந்தைகள், இச்சிகிச்சை மூலம் கேட்கும் திறனையும், பேசும் திறனையும் பெறுகிறார்கள். பெருநகரிலுள்ள சர்வதேச தரத்திற்கு இணையான செவித்திறன் பரிசோதனை கூடம் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறனை துல்லியமாகக் கண்டறியும் நவீன கருவிகளான OAE, BERA IMPEDENCE AUDIOMETRY போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நவீன அறுவை அரங்கம், துல்லிய அறுவை சிகிச்சை நுண்நோக்கி (ZEISS Operating Microscope) மற்றும் தேவையான நவீன கருவிகளும் உள்ளன.
இச்சிகிட்சை முறையில் நன்கு தேர்ச்சி பெற்ற காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், கேள்வித்திறன் மற்றும் பேச்சு பயிற்சி நிபுணர்களும் உள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் அதி தீவிர சிகிச்சை பிரிவு வசதிகளும் உள்ளது.
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இதுவரை 76 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக இங்கு அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு தற்போது தீவிர பேச்சு பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களின் கேள்வி மற்றும் பேச்சுத்திறன் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.
அறுவை சிகிட்சைக்குப் பின்னர் தேவைப்படும் முக்கியமான பேச்சு பயிற்சியும் (Audio Verbal Therapy) (வாரத்திற்கு இரண்டு அமர்வுகள், இரண்டு ஆண்டுகளுக்கு) இங்கு அளிக்கப்படுகிறது. மேலும், செவித்திறன் கருவியை கணினி மென்பொருள் மூலம் இயக்குவது (Swith On), மற்றும் அதன் செயல்திறனை குழந்தைக்கேற்றவாறு சமநிலைப்படுத்துவது (Mapping) போன்ற வசதிகளும் வழங்கப்படுகிறது. மேலும், இம்பிளான்ட் செவித்திறன் கருவிக்கு தேவையான பராமரிப்பு மற்றும் கருவி தயாரிப்பாளர்களின் ஒருங்கிணைப்பு வசதிகளும் வழங்கப்படுகிறது. இக்குழந்தைகளுக்கு தொடர் கண்காணிப்பு தேவைப்படுவதால், காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்து கொள்வதும், இரு ஆண்டுகள் தீவிர பேச்சு பயிற்சி எடுத்துக்கொள்வதும் பெற்றோரின் வசிப்பிடத்திற்கருகில் இருப்பது மிக மிக்கியமானதாகும்.
காக்ளியர் இம்பிளான் அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெற்றோருக்குக்கான குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கான கூட்டங்கள் ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படுகிறது. வழக்கமான பள்ளிகளில் சேர்ந்து பயிலும் இக்குழந்தைகளின் செயல் திறன் மற்றவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது.
பிறக்கின்ற அனைத்து குழந்தைகளும், பச்சிளம் குழந்தைகளுக்கான கேள்வித்திறன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இது மிகவும் எளிதான வலி இல்லாத பரிசோதனை ஆகும். கேள்வித்திறன் குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் பேச்சுத் திறன் நன்றாக வராத குழந்தைகள் கண்டிப்பாக கேள்விதிறனுக்கான பரிசோதனைகளை உடனடியாக செய்து கொள்ள வேண்டும்.
பிறவிக்காது கேளாமையை ஆரம்பத்திலேயே கண்டுபிடிபிடிப்பது மிக இன்றியமையாதது ஆகும். குழந்தைக்கு 6 மாத வயதிலேயே குறைபாட்டை அறிந்து அதற்கேற்ற சிக்கிதை முறைகளையும், தேவைப்படின், ஒரு வயதில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்வது, குழந்தையின் செவித்திறன் மற்றும் பேச்சாற்றல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது ஆகும். செவித்திறன் குறைபாட்டை தாமதமாக அடையாளம் காண்பது பேச்சு மற்றும் செவித்திறன் வளர்ச்சியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் இது குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது. குழந்தை பிறந்து ஆறு மாதமாகியும், சத்தத்திற்கு திரும்பா விட்டாலோ, ஒரு வயதாகியும் சிறு வார்த்தைகளை பேச ஆரம்பிக்கா விட்டாலோ அக்குழந்தையின் பெற்றோர்கள் காது மூக்கு தொண்டை பிரிவை அணுகி உடனடியாக கேள்விதிறனுக்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். தானாகவே வளரும் போது சரியாகி விடும் என்று காலம் தாழ்த்துவது குழந்தையின் எதிர்காலத்தை பாழாக்கக்கூடும். ஆரம்பத்திலேயே தேவையான சிகிட்சை முறையை செய்து கொள்வதால், கேள்வி மற்றும் பேச்சுத்திறன் முன்னேற்றம், மிகச் சிறப்பாக குறைபாடில்லாத குழந்தைகளை போலவே அமையும்.
For more info & help: E Mail <ci@entkgmch.org>
State of the art technology available at present to overcome the handicap of deaf mute in young children, born with congenital profound sensory neural hearing loss.
Incidence of children with profound sensorineural hearing loss - 1 in 1000 live births.
Earlier, the implantees need to go to Chennai to get operated and get audio verbal training for one year. This has been overcome by the introduction of cochlear implant programme in KGMCH.
2014 – CREATING THE INFRASTRUCTURE
AUDIOLOGY
State of the art complete sound proof twin room was made ready
A complete audiological battery of tests like Digital pure tone audiometry, Impedance audiometry, Oto Acoustic Emission and Brainstem Evoked Response Audiometry were fully functional.
Trained staff were ready
2015 – CREATING THE INFRASTRUCTURE
SURGICAL
Following surgical equipments were purchased and kept ready
Skeeter drilling systems
Zeiss & Sanma LED Operating Microscopes
Digital Micro motors
Special surgical instruments for CI
AUDIO VERBAL TRAINING
Facilities for one year intensive audio verbal training for the implantees with trained speech therapist were made ready.
2015 – PERMISSION FROM TNHSP & CMCHIS
Inspection done by CMCHIS team
Got approved as a Authorized Cochlear Implant centre by TNHSP & CMCHIS
KGMCH was the third CI centre to get authorized next to Madras Medical College, Chennai and Coimbatore Medical College, Coimbatore among the Government Medical Institutes.
2015 – FIRST CI SURGERY
13/06/2015
Three cases were operated and Cochlear Implant fixed successfully under the mentorship and guidance of Padmashree Prof. Mohan Kameshwaran.
02/07/2015
Switching on of the implants and kids started to hear the new sense – hearing in their life for first time.
CI – SURGICAL STATISTICS
Till Sept 2024, 75 Cochlear Implantation surgeries have been successfully performed in this center.
CI – OUTCOMES
Post CI outcomes are on par with CI centers in Major cities of India.
Students are enrolled in normal schools.
Implantees' club has been formed and family meets are organized by the Department twice in a year.
Audiological and Device supports are given for all the implantees' throughout their lifetime.
For more info & help: E Mail <ci@entkgmch.org>